படித்ததில் பிடித்தது ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது சரியா? - பழமொழியின் உண்மையான பொருளை அறிவோம் !👍
தினம் ஒரு தகவல் ✍
🪭🪭🪭🕊🪭🪭🪭
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது சரியா? - பழமொழியின் உண்மையான பொருளை அறிவோம் !👍
பழமொழிகள்💕 நம் வாழ்வின் வழிகாட்டிகள் தமிழ் மொழியில் பழமொழிகள் என்பவை நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை சுருக்கமாக சொல்லும் ஞானத்தின் உரை 👌 நவரத்தின வாக்குகள். இவை நம் பண்பாட்டின் ஆணிவேராக விளங்குகின்றன. ஒவ்வொரு பழமொழியும் ஒரு ஆழமான வாழ்வியல் கருத்தை, எளிமையான சொற்களால் விளக்குகிறது இன்று *பல பழமொழிகள் தவறாக புரிந்து தவறான முறையில் பயன்பாட்டில் உள்ளன 🏹 🌻
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் “ஆயிரம்( தடவை) முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பதாகும். இதில் ‘போய் சொல்லி’ *என்பது நேரில் சென்று அழைப்பது என்ற பொருளை கொண்டு உள்ளது ஆகையால் நாம் நமது உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் ஏதேனுமொரு கருத்து வேறுபாடுகள் கொண்டு இருந்தாலும், அவற்றை மறந்து, அவர்களை நேரில் சென்று அழைத்து,
நம் *உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.!
காலப்போக்கில் ஆயிரம் போய் சொல்லி என்பது ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் ! என்று தவறாக திரிந்து விட்டது.


Comments
Post a Comment