Posts

"தேவையும்...தேடலும்...!"

 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 இன்றைய சிந்தனை  ................................................................. "தேவையும்...தேடலும்...!" .......................................................... உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது... "தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலை போல திசையறியாது மூழ்கிப் போகும்" படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!, அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக் குறிதான் நம் முன் நிற்கும்... கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடிவரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்... பெரும்பாலானோர் கற்றுகொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை... வேலை தேடி நகர

குடும்ப சிறுகதை - சர்வமும்_சிவமயம்

  குடும்ப சிறுகதை - சர்வமும்_சிவமயம்  கோடி கௌரவர் கூடி நிற்கும்                " நீங்க என்ன சொன்னாலும் சரி! என்னால இதை ஒத்துக்கவே முடியாது சார்"                "நோ .... நீங்க இன்னும் பதினேழாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்துட்டு இருக்கீங்க மேடம்!"                 "தப்புன்னா தப்புதான்!  அது எந்த நூற்றாண்டா இருந்தாலும் சரி!"                  "ஒண்ணு புரிஞ்சுக்குங்க. ஒரு காலத்துல தப்பா பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இன்று சரியா தெரியுது"                   "கடவுளே வந்து சொன்னாலும் நான் இதை தவறு என்று தான் சொல்லுவேன்!"                   "மேடம்!  இதன் ஆதி மூலமே உங்க கடவுள் கிட்டேயிருந்து வந்த சோம பானம் தான்!"                     அலுவலக உணவு இடைவேளை நேரத்தில் நடந்த விவாதம் இதுதான். குடிப்பழக்கம் ஒன்றும் மகா பாதகம் அல்ல. அது இன்றைய சூழலில் மிகவும் சாதாரணமான ஒரு பழக்கம்தான். தினமும் 9 மணிக்கு மேல் 'ரிலாக்ஸுக்கு' நான்கைந்து மிடறு குடிப்பதில் எந்த குடியும் முழுகி விடப்போவதில்லை.                  "இட் இஸ் சோசியல் ட்ரிங்கிங். நாலுபேர் சேரு

மனிதநேயம் | Humanity

 #மனிதநேயம் ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள். மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று... பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார். எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்பட